

மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டி
பா.கஜோமிகா மாகாண மட்ட மெய்வல்லுனர் சம்மேளனப்போட்டியில் உயரம் பாய்தலில் இரண்டாம் இடம்

"கல்வியைத் தேடு உலகம் தேடும்"
மாறி வரும் உலகின் சவால்களுக்கு முகங் கொடுக்கக் கூடிய நற்துறைத் தேர்ச்சியுள்ள சமூகம்.
எமது பாடசாலை வளங்களைக் கொண்டு கல்வி நடவடிக்கைகளை அமுலாக்கத்தேவையான வசதிகள் வழிகாட்டல்கள் , ஆலோசனைகளை ப் பெற்று பாடசாலைக் கலைத்திட்டத்தினுடாக வினைத்திறனும், விளைபயனும் மிக்க செயற்பாடுகள் மூலம்ம சமநிலை ஆளுமையும் தேர்ச்சியும் மிக்க மாணவர்களை உருவாக்குதல்.
திரு.கணபதிப்பிள்ளை சிறிதரன்
மட்/ம.மே/கற்சேனை விஷ்ணு வித்தியாலயம்
பா.கஜோமிகா மாகாண மட்ட மெய்வல்லுனர் சம்மேளனப்போட்டியில் உயரம் பாய்தலில் இரண்டாம் இடம்
பாடசாலையின் உருவாக்கமும் வளர்ச்சியும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர்
பிரிவில் கற்சேனைக் கிராமம் அமைந்துள்ளளது. இக் கிராமம் வயலும் வயல் சார்ந்த பகுதிகளைக் கொண்டதாக
3.4 சதுரகிலோ மீற்றர் எல்லையைக் கொண்டதாகவும் பழம் பெரும் விவசாயக் கிராமமாகவும் காணப்படுகின்றது.
மேலும் மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி வலயத்துக்குட்பட்ட மண்முனை தென்மேற்கு கல்விக் கோட்டத்தினுள்
கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அமைந்துள்ளது.
இப் பாடசாலையானது 1978 ம் ஆண்டு காலப்பகுதியில் கிராமத்தலைவராகவும் கிராம அபிவிருத்திச் சங்க
தலைவராகவும் பணியாற்றிய திருவாளர் வேலாப்போடி சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் திரு.வேலாப்போடி –
சின்னத்தம்பி, திரு.நாகண்டாப்போடி - சங்கரப்பிள்ளை, திரு.பத்தினியார் - முருகுப்பிள்ளை,
திரு.குமரப்போடி – சின்னத்தம்பி, திரு.பரமக்குட்டி – பாலிப்போடி, திரு.வேலாப்போடி – கதிராமப்போடி,
திரு.இளையதம்பி – சின்னத்தம்பி ஆகியோர்களும் இணைந்து கிராமத்தின் அடிப்படைத் தேவைகளில்
முதன்மையானதாகக் கருதப்பட்ட பாடசாலையினை 1970.04.10 இல் பாலர் பாடசாலையாக கிராம அபிவிருத்திச்சங்க
தலைவரின் காணியில் ஆரம்பித்தனர். அதன் போது 22 மாணவர்களும் அவர்களுக்குக் கற்பிப்பதற்கென இதே ஊரைச்
சேர்ந்த செல்வி.சுப்பிரமணியம் - பூமணி, திரு.வேலாப்போடி – கோபாலபிள்ளை ஆகியோரை தொண்டர் ஆசிரியர்களாக
நியமித்து பாடசாலை செயற்பாட்டினைத் தொடர்ந்தனர்.
மேலும் கிராமத்தையும் பாடசாலையையும் அபிவிருத்தி செய்வதற்காக தொண்டர் நிறுவனங்கள், நன்கொடையாளர்கள்
போன்றோரிடம் சென்று கோரிக்கைகளை முன்வைத்து உதவிகளை கோரி வந்தனர். இந்நிலையில் தேற்றாத்தீவில்
இயங்கி வந்த பிரான்சிஸ்கன் எனும் அமைப்பு 10.10.1979ல் இருந்து பாடசாலையை பொறுப்பேற்று பாடசாலைக்கான
அடிப்படைத்தேவைகளை வாரா வாரம் பார்வையிட்டு தேவைகளை நிறைவு செய்து வந்தனர்.
அதன்பின் தொடர்ச்சியான பிள்ளைகளின் அதிகரிப்பினைக் கருத்தில் கொண்டு இக் கிராமத்தில் படித்த
இளைஞர்கள் இல்லாமையால் அம்பிளாந்துறையிலிருந்து செல்வி.சின்னத்தம்பி – கங்கேஸ்வரி அவர்களையும்
மற்றும் செல்வி.கணபதிப்பிள்ளை – கருணையம்மா அவர்களையும் தொண்டர் ஆசிரியர்களாக நியமித்தனர்.
இக்காலப்பகுதியில் கிராமத்தின் மத்தியில் தற்போது பாடசாலை அமைந்துள்ள இடத்தினை திரு.க.மூத்ததம்பி
மற்றும் திருமதி.மூ.மாதாச்சிப்பிள்ளை, திருமதி.அ.பொன்னம்மா, திருமதி. சி.இராசசிங்கம்
முதலானவர்களிடமிருந்து நன்கொடையாகப் பெற்று பாடசாலைக்கான ஒரு தனியான இடத்தினை கிராம மக்களின்
உதவியடன் 40’ⅹ20’ பரப்பளவுள்ள ஒரு தற்காலிக கொட்டில் ஒன்றினை அமைத்து பராமரித்து வரும் வேளையில்
கிராம அபிவிருத்திச் சங்கத்தினரின் அயராத முயற்சியினாலும் அக் காலப்பகுயில் வட்டாரக்கல்வி
அதிகாரியாக கடமையாற்றிய எஸ்.எஸ்.மனோகரன் அவர்களின் ஆலோசனையாலும் உதவியினாலும் 26.03.1980ம்
திகதியன்று அரசாங்கப் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டு பதிவுச்சான்றிதழ் கிடைக்கப்பெற்றுத.
மட்ஃமமேஃகற்ேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, குருக்கள்மடம் எனும் முகவரியை கொண்டிருந்த இப்
பாடசாலையின் முதல் அதிபராக திருப்பழுகாமத்தைச் சேர்ந்த திரு.சி.வேல்முருகு அவர்கள் 06.02.1980ல்
பொறுப்பேற்று நடாத்தினார். அப்போது தரம் - 01ல் 40 மாணவர்களைக் கொண்டு இப்பாடசாலையானது இயங்கி
வந்தது. திரு.சி.வேல்முருகு அதிபர் அவர்கள் தொடர்ந்து 03 மாதங்கள் கடமையாற்றியதன் பின்னர் குருக்கள்
மடத்தைச் சேர்ந்த திரு.க.முத்துலிங்கம் அதிபர் அவர்கள் 18.05.1980ல் பாடசாலையைப் பொறுப்பேற்று தனது
பணியைத் தொடர்ந்தார். இக்காலப்பகுதியில் ஆரம்பகால தொண்டர் ஆசிரியர்களான திரு.வே.கோபாலபிள்ளை மற்றும்
செல்வி.க.கருணையம்மா ஆகியோர்கள் பாடசாலைக்கு சமூகம் கொடுப்பதை நிறுத்தியிருந்தனர்.
திரு.க.முத்துலிங்கம் அதிபர் அவர்களின் காலப்பகுயில் 1981ல் றெட்பானா திட்டத்தின் உதவியுடன் 60’ⅹ20’
அளவில் நிரந்தரக் கட்டிடம் அமைக்கப்பட்டது. அதிபரின் அயராத பணியினாலும் இங்குள்ள கிராம
முன்னோடிகளின் துணையுடனும் பாடசாலையானது இயங்கி வந்த வேளையில் 1987ம் ஆண்டு இலங்கை இராணுவம்
முகாமிட்டிருந்து 7மாதம் கடந்த பின்னர் அவர்கள் வெளியேறியதும் தொடர்ந்து இந்திய இராணுவத்தினர்.
முகாமிட்டிருந்தனர். அவர்கள் வெளியேறியதும் பாடசாலையை அண்டிய பகுதிகள் பாதுகாப்பற்ற இடங்களாகக்
காணப்பட்டன.
இக் காலப்பகுதியில் 1988ம் ஆண்டு கற்சேனைக் கிராமத்தில் முதன் முதல் நியமனம் பெற்ற ஆசிரியராக
திரு.சுப்பிரமணியம் - தேவராஜன் இப் பாடசாலைக்கு ஆசிரியராக கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்
காலத்தில் பாடசாலையானது 01 – 05 கொண்ட பாடசாலையாக றெட்பானா கட்டிடத்துடன் மாத்திரம் சுற்றிவர
வேலிகள் போடப்பட்டு இரும்பு நுழைவாயில், பூந்தோட்டம் என்பன அமைத்திருந்தது. அதன் பின்னர் வந்த
இராணுவத்தினரால் பாடசாலைப் பொருட்கள், ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டு சிதைக்கப்பட்டன.
பாடசாலையிலும் பாடசாலையை அண்டிய பகுதிகளிலும் முகாம்கள் மாறி மாறிக் காணப்பட்டமையினால் கிராமத்து
மக்களது இடம்பெயர்வுகளும் ஏற்பட்டது. இதனால் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளைத் தொடர முடியாத நிலை
காணப்பட்டது. மீண்டும் 1990ல் றெட்பானா கட்டடம் முற்றாக இடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பின்னர் பாடசாலை அமைந்திருந்த இடத்திற்கு 1முஆ தூரத்தில் தனியாருக்கு சொந்தமான காணியில்
தற்காலிகக் கொட்டிலில் பாடசாலை இயங்கி வந்தது. குறிப்பிட்ட இடத்தில் 03 வருட காலம் பாடசாலை இயங்கி
கொண்டிருந்த வேளையில் 26.12.1990ல் அதிபர் திரு.க.முத்துலிங்கம் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல
அக்காலப் பகுதியில் ஆசிரியராக இருந்த திரு.சு.தேவராஜன் அவர்கள் கடமையைப் பொறுப்பேற்று நடத்திக்
கொண்டிருந்தார். இந் நிலையில் செட்டிபாளையத்தைச் சேர்ந்த திரு.செ.சதாசிவம் அதிபர் அவர்கள்
பாடசாலையைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன் பின்னர் 1994ம் ஆண்டு கிராம மக்களின் உதவியுடன் மீண்டும் உரிய இடத்தில் தற்காலிகக் கொட்டில்
அமைக்கப்பட்டு பாடசாலையானது இயங்கியது. 1997ல் 70’ⅹ20’ அளவில் ஒரு நிரந்தரக் கட்டிடம் மீண்டும்
அமைக்கப்பட்டது. இந் நிலையில் ஒரு நிரந்தரக் கட்டிடத்தையும் ஒரு தற்காலிக கட்டிடத்தையும் கொண்டு
தரம் - 05 வரையுள்ள பாடசாலையாக தொடர்ந்து இயங்கி வந்தது.
தொடர்ந்து 04.07.2001ல் திரு.செ.சதாசிவம் அதிபர் அவர்கள் வாகன விபத்தில் சிக்கியமையால் பாடசாலையை
கொண்டு நடத்த முடியாத நிலையில் அக் காலப்பகுதியில் ஆசிரியராக கடமையாற்றிய அரசடித்தீவைச் சேர்ந்த
திரு.இ.மேகராஜா ஆசிரியர் அவர்கள் நிைவேற்று அதிபராக நியமனம் செய்யப்பட்டு பாடசாலையைத் தொடர்ந்து
நடத்திக் கொண்டிருந்தார். இக்காலப் பகுதியில் பாடசாலை பொது மக்களால் எல்லைப்படுத்தப்பட்டு
பாடசாலைச்சூழல் சுத்தமாக்கப் பட்டதுடன் சுற்றிவர வேலிகள் போடப்பட்டு பாடசாலை அழகுபடுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2002ம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலைச்சின்னம், மாணவர்களின் கழுத்துப்பட்டி,
பாடசாலைக்கீதம் என்பன ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் பாடசாலையானது மாணவர்கள் விரும்பிக் கற்கக்
கூடியதாக மாற்றப்பட்டது. இதே ஆண்டில் முதன் முதல் கல்விச் சுற்றுலா மேற்கொள்ளப் பட்டிருந்தமை
குறிப்பிட்டிருந்தது. தொடர்ந்து 2003ம் ஆண்டு புனர்வாழ்வு நிதியின் கீழ் 80’ⅹ25’ பரப்பளவுள்ள
கட்டடம் ஒன்று கட்டப்பட்டு 2004ம் ஆண்டின் ஆரம்பத்தில் முடிக்கப்பட்டது. 2003ம் ஆண்டில் பற்றோ
நிறுவனத்தால் சிறுவர் முற்றம் அமைக்கப்பட்டது. அதே ஆண்டில் ஸ்ரீ மகா விஷ்ணு ஆலய உற்சவத்தில் முதன்
முதலாக ஆசிரியர் மாணவர்களால் கலை நிகழ்வு அரங்கேற்றப் பட்டமை குறிப்பிடத் தக்கது.
பின்னர் 2004ம் ஆண்டு காலப்பகுயில் இப் பாடசாலையின் பழைய மாணவரான திரு.சின்னத்தம்பி சதானந்தம்
அவர்களினால் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அத்தோடு பாடசாலைக் கட்டிடத்
திறப்புவிழா செய்தல் அதே ஆண்டில் முதன் முதலாக இல்ல விளையாட்டுப் போட்டியும் பரிசளிப்பு விழாவும்
நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தரம் 05 வரையுள்ள பாடசாலையானது தரம் 09 வரை தரமுயர்த்தப்பட்டு ஓலைக்கட்டிடமானது
அரை நிரந்தரக் கட்டிடமாக வேள்ட் விசன்ட் நிறுவனத்தினால் திருத்தப்பட்டு 03 கட்டிடமும் உள்ள நிலையில்
கல்விச் செயற்பாடுகள் விருத்தி, மாணவர்களின் அடைவுமட்டம் என்பன உயர்வான நிலையில் ஏற்படுத்தப்பட்டது.
மேலும் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு பாடசாலையின் கவின்நிலையில் படிப்படியான
வளர்ச்சியினையும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் மாணவர்களின் அடைவு மட்டமும் அதிகரித்திருந்த
வேளையில் மேலும் மாணவர்களுக்கான சுகாதாரம், பாதுகாப்பு என்பவற்றில் படிப்படியான வளர்ச்சியினைப்
பெற்றது.
மேலும் 2005ம் ஆண்டு ருேஐஊநுகு நிறுவனத்தின் அனுசரனையுடன் வலயக்கல்வி அலுவலகத்தினால் கிணறு ஒன்று
கட்டப்பட்டது. அதே ஆண்டில் ஒப்பந்தக்காரர் செல்வா என்பவரால் பாடசாலைக்கு நுழைவாயில் பெயர்ப்பலகை
அமைக்கப்பட்டது.
2006ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ ஜெயானந்தமூர்த்தி மற்றும் செல்வி.தங்கேஸ்வரி
ஆகியோர்களின் வரவு செலவு திட்ட நிதியிலிருந்து 100அடி மதில் கட்டப்பட்டது. அதே போன்று ஸ்ரீ மகா
விஷ்ணு ஆலய நிருவாகத்தினரால் விளையாட்டு மைதானத்திற்கான காணி வாங்கி கொடுக்கப்பட்டது.
அத்தோடு ருமு ளுஊர்ழுழுடு டுஐேபு இணைப்பு மூலம் பாடசாலைகளுக்கிையில் இணைப்பு ஏற்படுத்தி இதனூடாக
கோப்போ சில்றன் அமைப்பின் ஊடாக ஒலிபெருக்கி, மின் பிறப்பாக்கி, கணனி, புகைப்படபிரதி இயந்திரம்
முதலான பல பெறுமதியான பொருட்கள் கிடைக்கப்பட்டிருந்தன. அதன் வாயிலாக அபிவிருத்தித் திட்டங்களும்
மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளும் இணைப்பாடவிதான செயற்பாடுகளும் வளர்க்கப்பட்டன.
தொடர்ந்து 2007ம் ஆண்டு காலப்பகுயில் வேள்ட் விஷன்ட் நிறுவனத்தின் ஊடீனு எனும் வேலைத்திட்டத்தினூடாக
சுற்றி வர வேலித் தூண்கள், அதற்கான கம்பிகள்,பாடசாலைக் கட்டிடத்திற்கும் தளபாடங்களுக்கும் வர்ணம்
பூசுதல் என்பன ஏற்படுத்தப்பட்டு பாடசாலை அழகுபடுத்தப்பட்டது. பாடசாலை வளாகத்துக்குள் மரக்கன்றுகள்
வைக்கப்பட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் பாதணிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன. இக்
காலப்பகுதியில் பாடசாலை சிறப்பாக அமைந்திருந்தமையினால் பாடசாலை மதிப்பீட்டின் போது நல்ல பெறுபேறுகள்
கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஆயினும் 2007ம் ஆண்டு இடம்பெயர்வு ஏற்பட்டபோது சோக வரலாறாக காணப்பட்டது. பாடசாலைக்கு கிடைக்கப்பட்ட
இலத்திரணியல் பொருட்கள் உடைக்கப்பட்டு சூறையாடப்பட்டு சின்னா பின்னமாக்கப்பட்டன. மேலும் 2008ல்
தற்காலிக ஓலைக் கட்டிடம் முழுமையாக வேள்ட் விசன்ட் நிறுவனத்தினால் திருத்தப்பட்டமையும் 2009ம் ஆண்டு
உலக உணவு திட்டத்தின் மூலம் சமையலறைக் கட்டிடம் கட்டப்பட்ட அதே ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ
பா.அரியநேந்திரன் அவர்களின் வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து பொதுவான அபிவிருத்திகள்
மேற்கொள்ளப்பட்டமையும் 2009,2010 காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டி
வழங்கப்பட்டு போக்குவரத்து இலகுபடுத்தப்பட்டது. இவ்வாறு பாடசாலை படிப்படியாக வளர்ச்சிப் போக்கில்
சென்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு துரைராஜா சுகிர்தன் என்ற மாணவன் முதன் முதல்
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றமையும் ஓரு சிறப்பம்சமாகும்.
அதன் பின்னர் 2012ம் ஆண்டு பிள்ளை நேய பாடசாலை என்ற எண்ணக்கருவுக்குள் உள்வாங்கப்பட்டதுடன்
ருேஐஊநுகு நிறுவன உதவியுடன் நூலகக் கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டதுடன் ஆரம்ப மாணவர்களுக்கான நூலக
இறாக்கைகள் போடப்பட்டது. கமநெகும வேலைத்திட்டத்தின் மூலமாக மலசல கூடம் அமைக்கப்பட்டதுடன் ஐரோப்பிய
ஒன்றியத்தினுள் பாடசாலை உள்வங்கப்பட்டது. அதன்பின் வேள்ட் விசன் நிறுவனத்தினால் பாடசாலைக்கு
மின்னினைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இத்தகைய செயற்பாடுகள் பௌதீக இணைப்பாடவிதான செயற்பாடுகளில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தியது. இக்
காலப்பகுதியில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பாடசாலைக்கு வருகை தந்திருந்ததுடன் நல்ல பெறுபேறுகளும்
கிடைக்கப் பெற்றிருந்தது. மேலும் ருேஐஊநுகு பிரதிநிதிகளும் பாடசாலைக்கு வருகை தந்து மதிப்பீடுகள்
செய்து நல்ல பெறுபேறுகள் கிடைக்கப்பட்டமை சிறப்பம்சம் எனலாம்.
இதன் பின்னர் 2014ம் ஆண்டு தண்ணீர்த்தாங்கி அமைக்கப்பட்டு மாணவர்களின் குடிநீர் பிரச்சினைகள்
தீர்க்கப்பட்டதுடன் சுகாதாரப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இப்பாடசாலையானது
மாவட்ட மட்டத்திலான பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் இணைக்கப்பட்டது. இத்திட்டத்தில்
உள்வாங்கப்பட்டதன் விளைவாக முகாமைத்துவ செயற்பாடுகள் முறையாக திட்டமிடப்பட்டு
செயற்படுத்தப்படுகின்றது. சமூகப் பங்களிப்பு அதிகரித்துக் காணப்பட்டதுடன் பெற்றோர் பிள்ளைகளின்
செயற்பாடுகளை அறிந்து பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. 2003ம் ஆண்டு பற்றோ நிறுவனம் அமைத்த
சிறுவர் முற்றம் சிதைந்த நிலையில் காணப்பட்டமையால் 2014ம் ஆண்டு ருேஐஊநுகு நிறுவனத்தினால்
திருத்தியமைக்கப்பட்டது. 2014ம் ஆண்டு லண்டனில் திரு.திருமதி.சற்குனராஜா குடும்பத்தினரால்
நீர்த்தொட்டி அமைக்கப்பட்டது.
2015ல் பாடசாலைச் செயற்பாடுகள் தொடர்பான உலக வங்கி தரிசிப்பின் போது பாடசாலை பாராட்டைப் பெற்றதுடன்
பாடசாலையானது எல்லோரது கவனத்தையும் ஈர்க்ககூடியதாக மாறறியமைத்ததுடன்; ஐரோப்பிய ஒன்றியத்தின் கீழ்
மாவட்ட மட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பாடசாலை சேர்த்துக் கொள்ளப்பட்டு அபிவிருத்திகள்
செய்யப்பட்டன. இவ்வாறு மாணவர்களின் தேவைகள் இனங்காணப்பட்டு தீர்வுகளை நோக்கி சென்று கொண்டிருக்கும்
அதேவேளை இப் பாடசாலையின் பழைய மாணவரான திரு.நல்லதம்பி உதயகுமார் என்பவரின் குடும்பத்தினரால்
அன்பளிப்பு செய்யப்பட்ட பெற்றார் ஆசிரியர் சந்திப்பு மையமாகவும், பின்னேர மாணவர் நூலகமாகவும்,
மாணவர் மகிழ்ச்சி கூடமாகவும் பயன்படுத்த கூடிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டது. மேலும் மாகாண விஷேட
நன்கொடை (ீளுனுபு) திட்டத்தின் 80’ⅹ25’ அளவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடமும் 2016ல் திறந்து
வைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடயம் எனலாம். இவ்வாறு பாடசாைலானது தரம் 09 வரையுள்ளதாக
இருந்த போதிலும் உதவிகள்.ஒத்துழைப்புக்கள் மூலமாக அனைத்து வளங்களும் கொண்ட பாடசாலையாக
மாவட்டமட்டத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து திரு இ.மேகராசா அதிபரின் காலப்பகுதியில் முதல் முதலாக விளையாட்டு விழா, சாதனையாளர்
பாராட்டு விழா.சேனையருவி நூல் வெளியிட்டு விழா என முப்பெரும் நிகழ்வுகளை ஒரே நாளில் சிறப்பாக
நடாத்தி பெருமைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமாத்திரமின்றி அதிபரின் காலப்பகுதியில்
பாடசாலைக்கு வெளியிலுமுள்ள கிராமமட்ட பொது அமைப்புக்களுக்கு ஆலோசனைகள், நற்கருத்துக்கள் மூலமாக
கிராமம் சார்ந்த அபிவிருத்திகளுக்கு உதவியாயிருந்தமை சிறப்பம்சமாகும்.
இவ்வாறு பாடசாலையினது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயற்பாடு மூலமாக மாணவர்களின் அடைவுமட்டம்,
இணைப்பாடவிதான செயற்பாடுகள், பௌதீக வளங்கள், பழமர சூழல் என்பன அதிகரித்து சென்றதோடு கற்சேனை அரசினர்
தமிழ் கலவன் பாடசாலையானது அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் பாடசாலையாக மாற்றமடைந்து காணப்பட்டமை
குறிப்பிடத்தக்கது. இத்தகைய காலம் இடையிடையே இடம்பெயர்வுகள், யுத்தங்கள் போன்றன சவால் மிக்க காலமாக
காணப்பட்ட போதிலும் கிடைக்கப்பெற்ற வளங்களைக் கொண்டு பாடசாலையானது உன்னத நிலையில் அனைவரது
பாராட்டுக்களைப் பெற்றதன் அடிப்படையில் க.பொ.த. சாதாரண தர பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான
முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வந்ததது. இந் நிலையில் 2017.10.20 அன்று திரு. இ. மேகராஜா
அதிபர் அவர்களின் இடமாற்றம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து திரு. க. சிறிதரன் அவர்கள் அதிபர் அவர்கள் பாடசாலையைப் கடமையேற்றுக் கொண்டார்.
பின்னர் வகுப்பறைகளுக்கு மின் விசிறி, கைகழுவும் வேசன்,மின்விளக்குகள் ேளுடீளு (அண்மைய பாடசாலை
சிறந்த பாடசாலை) திட்டத்தின் கீழ் சகல வகுப்புக்களுக்கும் பொருத்தப்பட்டுள்ளது. அத்தோடு
குழாய்கிணற்றுக்கான நீர்ப்பம்பி பொருத்தப்பட்டுள்ளது. அதே ஆண்டில் ஜனாதிபதி அவர்களின் கிராமிய
அபிவிருத்தி திட்டத்தின் 20இலட்சம் ரூபா நிதிச் செலவில் குடிநீர் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு
பாடசாலைக்கும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் அமைந்தது
2018ம் ஆண்டு தேசிய உற்பத்தித் திறன் போட்டியில் எமது பாடசாலை உழஅஅநனெயவழைெ ல் வெற்றி பெற்றது. இதே
ஆண்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ.சீ.யோகேஸ்வரன் அவர்களின் னுஊடீ நிதிமூலம் 50 அடி
நீளமான மதில் கட்டப்பட்டது.இவ்வாண்டில் தேசிய பரீட்சையான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில்
மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் 100மூ சித்தியினை எய்து பாடசாலைக்கு பெருமையினை சேர்த்தனர்.
2019ம் ஆண்டில் கௌரவ இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் முயற்சியால் சுநுநுளுீ
திட்டத்தின் கீழ் ரூபா 2000,000 (2பில்லியன்) செலவில் விளையாட்டு அரங்கு, ஒரு பகுதி இரும்பு நெற்
வேலி, இன்னுமொரு பகுதி கிரவல் இட்டு சீராக்கிய வேலைத்திட்டம் இடம்பெற்றது. அத்தோடு பாடசாலைக்கு
அவசியமாகத் தேவைப்பட்ட (ீாழவழ ஊழில) நிழல் பிரதி இயந்திரமும் கிடைக்கப் பெற்றது. அதே ஆண்டில் தரம்
05 புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு மாணவன் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தி
பெற்றார்.
அத்தோடு 70 புள்ளிகளுக்கு மேல் 71மூ ஆன மாணவர்கள் சித்தி பெற்றனர்.
2020ம் ஆண்டில் பாடசாலை மைதான ஒரு பகுதியில் வலயக்கல்வி அலுவலகத்தின் அனுமதியுடன் வீதி
திருத்துவதற்கான பொருட்கள் சேகரித்து வைப்பதற்கு கொடுக்கப்பட்டு வாடகைப்பணம் பாடசாலை அபிவிருத்தி
சங்க கணக்கிற்கு ரூபா 336,000 கிடைக்கப்பெற்றது. மேலும் 2020ல் றுழசடன ஏளைளழைெ நிறுவனத்தின்
உதவியுடன் சமையலறை கதவு நிலை,இரும்பு நெற் போன்றன பொருத்தப்பட்டு வர்ணம் பூசப்பட்டு புனருத்தாரணம்
செய்யப்பட்டது. அத்தோடு ஆங்கில செயற்பாட்டறைக்கு தேவையான ளுஅயசவ வுஏஇளுவயனெ குயெ,அலுமாரி,ஏனைய
கற்றல் உபகரணங்கள் எமது பாடசாலைக்கு வழங்கப்பட்டது. இவ்வாண்டில் முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளரும்
மாகாணக்கல்விப் பணிப்பாளரான அகிலா கனகசூரியம் அம்மணியின் வழிநடத்தலும் எமது வேண்டுகோளுக்கமைய
(ளுஅயசவ ஊடயளள சுழழஅ) திறன் வகுப்பறைக்கான இலத்திரணியல் கற்பித்தல் சாதனங்கள் (ஐஆர்ழு)
ஐவெநசயெவழையெட ஆநனைஉயட ர்நயடவா ழுசபயெணையவழைெஇ ருளுயுஇ சுயவயெஅ கழரனெயவழைெ இ ருமு அனுசரணையுடன் நிதி
உதவி பெற்று தரப்பட்டது. இதன்காரணமாக ஆசிரியர்கள் மாணவர்கள் நவீன கற்றல் கற்பித்தல் இடம்பெறுவது
புதிய பரிணாம வளர்ச்சியாகும்.
2020ல் தேசிய உற்பத்தித் திறன் விருதுப் போட்டியில் எமது பாடசாலை மீண்டும் ஊழஅஅநனெயவழைெ வெற்றி
பெற்றது. அதனைத் தொடரந்து தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேல் 2
மாணவர்களும், 70 புள்ளிக்கு மேல் 91மூ மாணவர்களும் சித்தி பெற்றனர். இவ்வாண்டிலே பாடசாலை தரம்
உயர்த்தல் நிர்வாகரீயான வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம். தரம் 9 வரை கற்றலில் ஈடுபட்ட மாணவர்கள் தரம்
10,11ற்கு வேறு பாடசாலைக்கு சென்று கல்வி கற்கும் நிலைமை காணப்பட்டது.இதன் காரணமாக சில மாணவர்கள்
இடைவிலகலிலும் காணப்பட்டனர். போக்குவரத்து பிரச்சினை ஏனைய சூழல் பிரச்சினையும் தாக்கம் செலுத்தின.
இதனால் பாடசாலையை தரம் உயர்த்த (தரம்10,11)பொதுக்கூட்டம் நடத்தி பெற்றோர்கள்,
பழையமாணவர்கள்,நலன்விரும்பிகள் ஆதரவுடன் வலயக்கல்வி பணிமனையின் ஊடாக கௌரவ. சதாசிவம் வியாழேந்திரன்
அமைச்சரின் கடிதத்தினூடாகவும் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மாகாணகல்வி பணிமனை சென்று கடந்த
2021.01.01 அன்று முதல் தரமுயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து முதன்முதலாக 2022ம் ஆண்டு முதல் தடவையில்
க.பொ.த.சாஃதர பரீட்சையில் தோற்றிய அனைத்து மாணவர்களும் க.பொ.த உயர்தரம் கற்பதற்கு (தமிழ்,கணிதம்)
உட்பட 100மூ சித்தியினைப் பெற்று வலயமட்டத்தில் முதலிடத்தினையும் அடைந்து பாடசாலைக்கும்
கிராமத்திற்கும் பாராட்டு பெற்றிருந்தோம்
இச்சாதனையை அடைவதற்கு ஆசிரியர்கள்,பழைய மாணவர்களும் ஊழுஏஐனு -19 காலப்பகுதியிலும் சுகாதார
நடைமுறையினை கையாண்டு இரவு நேர வகுப்புக்கள், பகுதி நேர வகுப்புக்களையும் வலயக்கல்வி அலுவலகம்,
ஆழுர் போன்றவர்களின் ஆலோசனையைப் பெற்று அதிபரின் நெறிப்படுத்தலின் நன்கொடையாளர்களின் கீழ் வெற்றி
காணக்கூடியதாக இருந்தது. இவ்வாண்டிலே தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு
மேல் 1 மாணவனும் 70 புள்ளிகளுக்கு மேல் 90மூமாணவர்களும் சித்தி பெற்றனர்.
அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சியாக நீண்ட காலமாக (43 வருடங்களாக) பாடசாலையின் பெயர் மட்ஃமமேஃகற்சேனை
அ.த.க.பாடசாலை எனும் பெயரில் காணப்பட்டது. இதனை கடந்த 2022ம் ஆண்டு பொது அமைப்புக்கள் பாடசாலை
அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர்கள் அனைவரும் பாடசாலையின் பெயரை மட்ஃமமேஃகற்சேனை விஷ்ணு
வித்தியாலயம் என மாற்ற வேண்டும் என்ற பொது முடிவுடன் கோட்டக்கல்வி பணிப்பாளர், வலயக்கல்வி
பணிப்பாளரின் சிபாரிசிற்கு அமைய மாகாணகல்வி அமைச்சும் மாகாணகல்வி திணைக்களமும் கடந்த 2023.10.19ம்
திகதி தொடக்கம் மட்ஃமமேஃகற்சேனை விஷ்ணு வித்தியாலயம் கற்சேனை கொக்கட்டிச்சோலை என பெயர் மாற்றம்
செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வாண்டு இறுதியில் பாடசாலையின் பௌதிக அபிவிருத்தி விடயத்தில்
கற்சேனையூர் உதவும் சிறகுகள் அமைப்பினர் பாடசாலையின் பெயர்ப்; பலகையையும் அதற்கான தூண்களையும்
நிர்மானித்தனர்.அதே போல் நுழைவாயில் கதவை பழுகாமம் பரம்பரை ஒன்றியத்தின் அனுசரணையுடன்
அமைக்கப்பட்டது. இது போல் முன் மதிலை 2அடி உயர்த்தி புனருத்தாரணம் செய்வதற்கு பெற்றோரின் நிதி
பயன்படுத்தப்பட்டது. அத்தோடு பெற்றோர் தங்குமிட கூடத்தினை திரு.ந.உதயகுமார் குடும்பத்தினர்
புனருத்தாரணம் செய்து தந்தனர். அதே போல் சரஸ்வதி சிலையினை திருமதி.சின்னத்தம்பி தங்கம்மா அவர்களின்
அனுசரணையில் அமைக்கப்பட்டு இன்று பாடசாலையில் அழகாக காட்சியளிக்கின்றது.
இவ்வாறு இந்த இடமானது பலதடவைகள் யுத்தம் நடைபெற்று பாதுகாப்பற்ற யுத்த வடுக்களை கொண்டதாக இருந்த
போதிலும் பல கரடு முரடனான சவால்களை மாற்றி கிராமத்தின் இரு கண்களாக அருள் மிகு மஹாவிஷ்ணு ஆலயம்,
விஷ்ணு வித்தியாலயம் அமையப்பெற்று இக்கிராமத்திற்கும், பிரதேசத்திற்கும் பறைசாற்றி நிற்கின்றது. அது
மாத்திரமன்றி இப்பாடசாலைக்கு கிடைக்கப் பெற்ற ஒவ்வொரு அதிபர்களினதும் அது சார்ந்த ஆசிரியர்களின்
ஒத்துழைப்பும் சேவையும் போற்றி மதிக்கத் தக்கதாகவும் சமூகத்தின் அயராத பங்களிப்பின் தன்மையால்
26.03.2024 இன்றைய நாள் விைளாட்டு, பரிசளிப்பு, ஆண்டு விழா, பாடசாலை பெயர்ப்பலகை, சரஸ்வதி சிலை
திறப்பு, சேனையருவி – 2 நூல் வெளியீடு என பல நிகழ்வுகள் ஒரே நாளில் நடைபெறுகின்றமை மட்டற்ற
மகழ்ச்சியான தருணமாகும்.